களத்தில் இல்லாத கட்சியா?

 வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட விஜய்.. களத்தில் இல்லாத கட்சியா? அடித்து துவைக்கும் அதிமுகவினர்! தப்பித்த திமுக!

திமுக எதிர்ப்பு என்ற பிரதான ஆயுதத்துடன் தமிழக அரசியலில் களம் கண்டிருக்கிறார் விஜய். அதே நேரத்தில் 'களத்தில் இல்லாதவர்கள்' என நாம் தமிழர் கட்சியை குறிப்பிடுவதாக சொன்னாலும் விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர். 50 ஆண்டுகளை கடந்த இயக்கத்தை விஜய் புறம் தள்ளி பேசுவதோடு எம்ஜிஆர், ஜெயலலிதா அடையாளங்களை பறிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடாகி வரும் நிலையில் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையை துவக்கி விட்டன. நடிகர் விஜயும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த 18ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் செங்கோட்டையன். அதில் பேசிய விஜய் திமுக வழக்கம் போல திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். அதே நேரத்தில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குறித்து பேசவில்லை.
அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் களத்தில் இல்லாத கட்சிகளை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என சொன்னார் விஜய். கட்சி ஆரம்பித்ததில் இருந்து, விஜயை நாம் தமிழர் கட்சி விஜய் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அந்த கட்சியை குறிப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திமுக -தவெக இடையேதான் போட்டி என்ற பேச்சின் மூலம் அதிமுகவை புறந்தள்ளிவிட்டு அந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள பார்க்கிறார் விஜய் என கூருகின்றனர் அதிமுகவினர்.
மேலும் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா என அதிமுகவின் தலைவர்களை தவெகவுக்கு அடையாளமாக பயன்படுத்தி தமிழக அரசியலில் திமுகவுக்கு மாற்று தவெகதான் என முன்னிறுத்த முயல்கிறார் விஜய் எனக் கூறும் அதிமுகவினர் தற்போது அவரை வசைபாட தொடங்கி இருக்கின்றனர். அதிமுக, கட்சி பலமாக இல்லை, பிளவுபட்டுள்ளது என சொல்லப்பட்ட நிலையிலும், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 23.5 சதவீத வாக்குகளை தக்கவைத்துக் கொண்டது. இந்த வாக்கு வங்கி எந்த ஒரு தனிநபரின் பிரச்சாரத்தாலும் உருவானது அல்ல.
எம்ஜிஆர் - ஜெயலலிதா என்ற அரசியல் முகவரியும், இரட்டை இலை என்ற அடையாளமும் இணைந்து இருந்ததால்தான் அந்த ஆதரவு தொடர்கிறது என்பதே பொதுவான கணிப்பு. ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர்களை மேடைகளில் உச்சரிப்பதாலும், அவர்களது படங்களை சட்டைப் பையில் வைத்துக் கொள்வதாலும் மட்டுமே அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் இழுத்துவிட முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
அண்ணாவும் எம்ஜிஆரும் காலகட்ட மாற்றத்தை உருவாக்கியவர்கள். அந்த வரிசையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூறும் விஜய், மேடைகளிலும் பதாகைகளிலும் எம்ஜிஆர் படத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆனால், "எம்ஜிஆர் படம் காட்டியவுடன் பின்னால் வந்து விடும் கூட்டம் அதிமுக தொண்டர்கள் அல்ல" என்பதே அக்கட்சியின் உறுதியான நிலைப்பாடு. இதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்த சசிகலாவையும், இரண்டு முறை முதல்வராக அமர்த்தப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுக தொண்டர்கள் நிராகரித்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியை "களத்திலேயே இல்லாத கட்சி" என்ற தொனியில் விஜய் பேசியது, அதிமுக முகாமில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு தொடர்ந்தால், அதிமுகவும் இனி அமைதியாக இருக்காது. விஜய்க்கு எதிராக நேரடியான அரசியல் தாக்குதல்கள் தொடங்கும். அதே நேரத்தில், தவெக தரப்பும் அதிமுகவை விமர்சிக்கலாம், இது திமுகவுக்கு தான் கூடுதல் பலம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
copied from social media

செங்கோட்டையனை யாரும் நம்ப மாட்டர்கள்

 செங்கோட்டையனை யாரும் நம்ப மாட்டர்கள்.. அவரை தவிர வேறு யாரும் கட்சி மாறா மாட்டார்கள்.. அடித்துக் கூறும் அதிமுக முக்கிய புள்ளி!!

தவெக தலைவர் விஜய் அரசியல் எதிரி என திமுக-வையும், கொள்கை எதிரி என பாஜக-வையும் வசைபாடிக் கொண்டே, இடையில் இருக்கும் அதிமுக-வின் அஸ்திவாரத்தையும் சந்தடி இல்லாமல் அசைத்துக் கொண்டிருக்கிறார்.
கடைசி நேரத்தில் மனம் மாறி விஜய் தங்கள் பக்கம் வரலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக இன்னமும் விஜய்யை விமர்சிக்காமல் விட்டு வைத்திருக்கிறது. ஆனால், ‘நானே முதல்வர்’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட விஜய், அதிமுக-வை தாக்கவில்லை என்றாலும் அந்தக் கட்சியின் கட்டுமானத்தில் இருக்கும் செங்கல்களை செங்கோட்டையன் மூலமாக உருவும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
நேற்று பெருந்துறை மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், ‘‘அண்ணா, எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் தமிழகத்தின் சொத்து. அண்ணன் செங்கோட்டையன் நம்மோடு வந்து சேர்ந்தது நமக்கு பெரிய பலம். அவரை போல் இன்னும் நிறைய பேர் வந்துசேர இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்” என்றார்.
“எங்கள் கூட்டணிக்கு வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்குகொடுபோம்” என ஆரம்பமே தமிழக அரசியலை அதிரவிட்ட விஜய், இப்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறார். இதில், அதிமுக தலைகள் பலருக்கு செங்கோட்டையன் வலை விரித்தி ருப்பதும் அதை ஊக்குவிக்கும் விதமாக பெருந்துறையில் விஜய் பேசி இருப்பதும் அதிமுக-வினரை ஆத்திரமூட்டி இருக்கிறது. விஜய்க்கு அதிமுக தலைவர்கள் இன்னும் ஏன் பதிலடி கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.
“தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறும்நிகழ்வு அதிமுக-வில் எழுச்சியுடன் நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை பெருமைப்படுத்துவதற்காக சில கருத்துகளைச் சொல்வார்கள். தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர்கள் அப்படிச் சொல்வார்கள்.
அப்படித்தான் செங்கோட்டையனும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால், இதுவரை யாராவது அங்கு போய் சேர்ந்தார்களா? அவரை நம்பி யாரும் செல்லவில்லை. இனிமேலும் சேரமாட்டார்கள். பாதை தவறிச் சென்றவர்களால் சரியான அரசியல் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது; காட்டவும் முடியாது என்பதை அதிமுக-வினரும் அரசியல் வரலாறு தெரிந்தவர்களும் நன்கு அறிவார்கள்.
ஆரம்பத்தில், தொண்டர்களை நம்பி கட்சி தொடங்கியவர்கள் இப்போது மாற்றுக் கட்சி தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள் என்றால், கரூர் சம்பவத்திற்கு முந்தைய அவரது பேச்சுக்கும் அதன் பிறகான அவரது நிலைப்பாட்டிலும் நிறைய மாறுபாடு ஏற்பட்டுள்ளது” என்றார்.

பலமாகும் செங்கோட்டையன்

 வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்

தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி அவசியம் என்பதை விஜய் புரிந்து கொண்டுவிட்டார் போல் தெரிகிறது. செங்கோட்டையன் தலைமையில் தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், கூட்டணி வைப்பது அவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி காலத்திற்குப் பிறகே, இங்கு கூட்டணி வைத்துதான் அந்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளதை வரலாறு காட்டுகிறது. அதனால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், தனித்தே போட்டி என்பதை தான் கூறி வந்தார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் இன்று ஆலோசனை.?
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்து முடிவெடுக்க, தேர்தல் கூட்டணி குழு அமைக்க கட்சியின் தலைவர் முடிவு செய்தள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த பேச்சுவார்த்தை குழுவை அமைப்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் அவர் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர், தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
செங்கோட்டையனை நம்பும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். அவரது வரவு, தவெக-விற்கு அதிக பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பயணத் திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த அனைத்து பொறுப்புகளும் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், சொந்த மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து, விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளார் செங்கோட்டையன். இந்த நிலையில், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றை தவெக அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இடம் பெற்றுவார்கள் என தெரிகிறது.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனால், மற்ற கட்சித் தலைவர்களை எளிதில் அணுக முடியும் என்று விஜய் நம்புகிறார். இதனால், அவரது தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்காத பாமக, தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை செங்கோட்டையன் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தவெக தலைமையில் ஒரு கூட்டணி மலரும் என தெரிகிறது.
ஜனவரி மாதத்திற்குள் தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குவேன் என செங்கோட்டையன் சபதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
“பொங்கலுக்குப் பிறகு தவெக-வை பார்த்து நாடே வியக்கும்“
இப்படிப்பட்ட சூழலில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று தெரிவித்துள்ளார்.
“தவழும் குழந்தைகள் தான் பெரியவர் ஆவார்கள், பெரியவரான பின் தான் தன்னாட்சி நடத்துவார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவு தீர்ப்பளிக்கும். பொங்கல் முடிந்ததற்குப் பிறகு, எங்களுடைய திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும்.“ என்று தங்கள் கட்சி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தற்போது வெளியாகியுள்ள கூட்டணி பேச்சுவார்தைக் குழு குறித்த தகவலை உறுதியாகிறது. அப்படியானால், வரும் நாட்களில் செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது என்று நம்புவோம்.
copied social media

விஜய் சிஎம் ஆகனும் சார்.

 விஜய் சிஎம் ஆகனும் சார்.. ஆனால் ஆட்சிக்கு வந்து என்ன செய்யனும்னு தெரியாது.. கள ரிப்போர்ட் இதோ

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், கரூர் நிகழ்வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதல் பெரிய பொதுக்கூட்டத்தை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடத்தினார். காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்த இந்த மக்கள் சந்திப்பில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.போலீசார் விதித்த 84 நிபந்தனைகளுடன் அனுமதி பெறப்பட்ட இக்கூட்டத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நான்கு அடுக்கு தடுப்புகள், 72 பிரிவுகள், 1,797 போலீசார் உள்ளிட்ட ஏற்பாடுகள் இருந்தன. விஜய் தனது பிரசார வாகனத்தின் மேலிருந்து உரையாற்றினார். மேடை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், குறிப்பாக பெண்கள் பெருமளவில் கொடியசைத்து உற்சாகம் காட்டினர். வீடியோ காட்சிகளில் தெரிவது போல, பெரும் கூட்டம் விஜயை வரவேற்க திரண்டிருந்தது.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்தவர்களிடம் பத்திரிகையாளர்கள் சார்பில் அவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கருத்து கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை, ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாததை விஜய் செய்வார் என்று பொத்தாம்பொதுவாக கூறினர், எதை செய்யவில்லை, எதில்தான் தமிழகம் பின்தங்கிவிட்டது, அதை விஜய் எப்படிச் செய்வார் என்ற எந்த விவரத்தையும் சொல்ல தொண்டர்களுக்கு தெரியவில்லை.
விஜயின் உரையில் முக்கிய அம்சங்கள்:
திமுகவை கடுமையாக விமர்சனம்: "திமுக ஒரு தீய சக்தி. திமுகவும் பிரச்சினைகளும் ஒன்றாகவே வருகின்றன. விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அத்திகடவு-அவினாசி திட்டத்தை மட்டும் போட்டோ எடுப்பதற்காக பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார்.
தவெகவை புகழ்ந்து: "தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தியான திமுகவை வீழ்த்துவோம்" என உறுதியளித்தார்.
அண்ணா, எம்ஜிஆர் பற்றி: "அண்ணா, எம்ஜிஆர் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை நாங்கள் சொந்தம் கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது" என்றார். "33 ஆண்டுகளாக கட்டியெழுப்பிய மக்கள் நம்பிக்கையை அழிக்க முயல்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்" என உற்சாகமாக பேசினார். "களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது. களத்தில் இருப்பவர்களுடன் தான் போட்டி" என்று சாடினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொங்கு மண்டலத்தில் தவெகவின் வலிமையை நிரூபிக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்தது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கொடியசைத்து வரவேற்றனர்.
copied social media

ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல்

 ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்.. ஆனா ஒரு கண்டிஷன்!! முன்னாள் முதல்வர் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

ADMK TVK: அடுத்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இருக்கிறது. அதற்காக இப்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தேர்தல் வேட்டையை தொடங்கிவிட்டன. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவில் அதிக தொண்டர்களும், அதிமுகவின் முகங்களும் இணைந்து வருகின்றன. இவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த பணியை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததை போல, அக்கட்சிக்கு காட் பாதராக 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் இணைந்த கையுடன் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரும் தவெக சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்சமயம் வரை நடைபெறவில்லை. டிடிவி தினகரன் ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
ஜனவரியில் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதால், இவர் மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சசிகலாவின் அரசியல் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. மீதமிருப்பது ஓபிஎஸ் மட்டும் தான். எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்து விட வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் இவர் அதிமுகவில் சேர்ந்தால் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால், இபிஎஸ் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வந்தார்.
பாஜக உடன் ஓபிஎஸ் அடிக்கடி பேசி வருவதன் காரணமாக தான் விஜய் இவரை கூட்டணியில் சேர்க்க மறுக்கிறார் என்று தவெக வட்டாரங்கள் கூறின. இப்படி ஓபிஎஸ்யின் நிலைமை திக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், செங்கோட்டையன் ஓபிஎஸ்யை கட்சியில் சேர்க்க விஜய்யிடம் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் பாஜக உடனான நெருக்கத்தை குறைத்து கொண்டால் அவரை தவெகவில் சேர்த்து கொள்ள விஜய் சம்மதம் தெரிவித்தாகவும் பலரும் கூறுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டு காலம் ஓபிஎஸ்க்கு பாஜக உதவியாக இருந்தது. இதனை தவிர்த்து விட்டு அவர் விஜயுடன் கை கோர்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
copied social media

விஜய்யின் குறி

 விஜய்யின் குறி எப்போதுமே நம்பர் ஒன் மீது தான் இருக்கும்.. சினிமாவில் அஜித்தை அவர் போட்டியாக கருதியதே இல்லை, அவரது டார்கெட் ரஜினி மட்டும் தான்.. அரசியலிலும் அப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின் மட்டுமே குறி.. மற்றவங்க எல்லாம் எனக்கு போட்டியே இல்லை என்பதே விஜய்யின் மறைமுக செய்தி.. ரஜினியை முந்தியது மாதிரி, ஸ்டாலினையும் முந்துவாரா?

திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த விஜய், ஆரம்பத்திலிருந்தே தனது இலக்குகளை துல்லியமாக நிர்ணயிப்பவர். சினிமாவில் தனக்கு சமகால போட்டியாளர்களாக கருதப்பட்ட அஜித் போன்றவர்களை அவர் ஒருபோதும் தனது இலக்காக கொண்டதில்லை. மாறாக, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி என்ற உச்சாணி கொம்பில் இருப்பவரை முந்துவதையே தனது நோக்கமாக கொண்டு காய்களை நகர்த்தினார். இன்று வசூலிலும் புகழிலும் ரஜினியின் இடத்தை தாண்டி பிடித்திருக்கும் விஜய், அதே வியூகத்தை தான் அரசியலிலும் கையில் எடுத்துள்ளார். களத்தில் உள்ள எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக அல்லது நாம் தமிழர் கட்சியை ஒரு பொருட்டாகவே மதிக்காத விஜய், அவரது ஒட்டுமொத்த பார்வையையும் ஆளும் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீதே நிலைநிறுத்தியுள்ளார்.
விஜய்யின் சமீபத்திய அரசியல் மேடை பேச்சுகள் அனைத்தும் “முதல்வர் மட்டுமே குறி” என்ற கோட்பாட்டை வழிமொழிகின்றன. ‘களத்திலேயே இல்லாதவர்களை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் சொல்வது அதிமுக மற்றும் பாஜகவின் அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. சினிமாவில் எப்படி ரஜினியின் பட வசூலைத் தனது அடுத்த இலக்காக கருதினாரோ, அதுபோலவே அரசியலில் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை மட்டுமே அவர் தனது ஒரே சவாலாக கருதுகிறார். மற்ற அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணடிக்காமல், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரை மட்டுமே விமர்சிப்பதன் மூலம், தன்னையே பிரதான எதிர்க்கட்சியாகவும் மாற்றாகவும் அவர் சித்தரிக்கிறார்.
இந்த “நம்பர் ஒன்” டார்கெட் பாலிசி என்பது ஒரு வகையான உளவியல் போர். ரஜினியை போட்டியாளராக கருதியபோது, விஜய்யின் ரசிகர் பட்டாளம் அவரை ரஜினியின் உயரத்திற்கு இணையானவராக பார்க்கத் தொடங்கியது. அதே யுக்தியை இப்போது முதல்வர் ஸ்டாலின் விஷயத்திலும் அவர் செயல்படுத்துகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையோ அல்லது மூத்த அமைச்சர்களையோ கண்டுகொள்ளாமல், நேரடியாக முதல்வரை மட்டும் விமர்சிப்பது, விஜய்யை தமிழக அரசியலில் ஸ்டாலினுக்கு இணையான ஆளுமையாக மக்களிடையே பதிய வைக்கிறது. இது மற்ற எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை தானாக குறைத்து, 2026-ல் களத்தில் இருப்பது திமுகவும் தவெகவும் மட்டும்தான் என்ற பிம்பத்தை வலுவாக்குகிறது.
சினிமாவில் ரஜினியை முந்தியது போல அரசியலில் ஸ்டாலினை முந்துவது விஜய்க்கு அத்தனை சுலபமான காரியமாக இருக்காது. சினிமாவில் ரஜினிக்கு வயது மற்றும் படங்களின் எண்ணிக்கை ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அரசியலில் திமுக என்பது அரை நூற்றாண்டு கால கட்டமைப்பு கொண்ட ஒரு பேரியக்கம். முதல்வர் ஸ்டாலின் பல போராட்டங்களை கடந்து வந்த அனுபவசாலி. விஜய் தனது கவர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் ரசிகர் பலத்தை மட்டும் நம்பி இந்த மல்யுத்தத்தை தொடங்கியுள்ளார். சினிமாவில் ரஜினியின் சிம்மாசனத்தை கைப்பற்றியது போன்ற ஒரு மேஜிக் அரசியலில் நடக்குமா என்பதே தற்போதைய கேள்வி.
விஜய்யின் இந்த மறைமுகச் செய்தி மற்ற எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியோ அல்லது சீமானோ விஜய்யை விமர்சித்தாலும், அவர் அவர்களை திரும்பிப் பார்க்க கூடத் தயாராக இல்லை. இந்த தந்திரமான மௌனம் அவர்களை அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டும் முயற்சியாகும். தன்னை எப்போதுமே ஒரு பெரிய சக்தியுடன் மட்டும் மோதும் வீரனாக காட்டிக்கொள்வதில் விஜய் முனைப்பு காட்டுகிறார். இது தொண்டர்கள் மத்தியில் நாம் தோற்கடிக்க வேண்டியது திமுகவை மட்டுமே என்ற தெளிவான இலக்கை உருவாக்குகிறது.
இறுதியாக, 2026 தேர்தல் களம் தான் விஜய்யின் இந்த ‘டார்கெட் நம்பர் ஒன்’ வியூகத்தின் வெற்றியை தீர்மானிக்கும். சினிமாவில் ரஜினியை முந்தியதற்கு காலம் அவருக்குப் பல வாய்ப்புகளை வழங்கியது. ஆனால் அரசியலில் மக்கள் தீர்ப்பு என்பது ஒரு முறை தவறிப்போனால் மீண்டும் எழுவது கடினம். முதல்வர் ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ மற்றும் நீண்ட கால அரசியல் அனுபவத்தை விஜய்யின் ‘புதிய மாடல்’ மற்றும் திரைக்கவர்ச்சி முறியடிக்குமா? ரஜினிக்கு அளித்த அதே சவாலை இப்போது ஸ்டாலினுக்கு விடுத்துள்ள விஜய், அரசியலிலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
copied from social media

ஆதவ் அர்ஜுனா

 ஒத்த சீட்டுக்காக அணி மாறிய ஆதவ் அர்ஜுனா.. அசிங்கப்படுத்திய எடப்பாடி! தவெகவுக்கு தாவிய காரணம் இது தானா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் வெளியேறிய ஆதவ் அர்ஜுனா விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், முன்னதாக கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மூலம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆதாவ் அர்ஜுனா அதிமுகவில் சேர தான் முயற்சித்தார். ஆனால், அவரது 'டிமாண்டை' எடப்பாடி ஏற்காததால் தான் தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன?
அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், 2024ன் இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே திமுகவுக்காக பணியாற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அவரது ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம் அதற்கு பிறகு வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமாக மாற்றப்பட்டது.
அப்போது திமுகவுக்காக பிரச்சார வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான் தான் என ஆதவ் அர்ஜுனாவே கூறியிருந்தார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அவருக்கு உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பல்வேறு விவகாரங்களை மூத்த நிர்வாகிகளுடன் பிணக்கு ஏற்பட்டதால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார.
பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர், அதிமுகவில் அவர் இணைவது உறுதி என அதிமுக சீனியர்கள் கூறி வந்தனர். ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைவதற்கு எடப்பாடி இடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் எனவும் கூறப்பட்டது. இப்படியாக ஆதார் அர்ஜுனா அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென விஜயை அவர் சந்தித்து பேசியதோடு, சில நாட்களில் அக்கட்சியில் சேர்ந்தது அப்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனாவை கட்சிப் பணியிலும், தேர்தல் ஆலோசகராகவும் நியமிக்க விஜய் சம்மந்தித்ததாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதால் அவர் கட்சியில் சேர்ந்ததாக கூறப்பட்டது. அதே போல் ஆதவுக்கு சேர்ந்தவுடனேயே பதவியும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே அதிமுகவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஆதவ் அர்ஜுனா, விஜய் பக்கம் சென்றது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைசி வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் சேராமல் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தது ஏன் என்ற காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேசிய அதிமுக மூத்த தலைவர் ஒருவர்," விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் ஆதவ் அர்ஜுனா முதலில் பேச்சு வார்த்தை நடத்தியது அதிமுகவிடம் தான்.
மாநில அளவிலான பொறுப்பு கேட்ட நிலையில் அதனை தரவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகத்தான் இருந்தார். ஆனால் 2024 மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்க வேண்டுமென ஆதவ் அர்ஜுனா எடப்பாடி இடம் வலியுறுத்தி கேட்டார். கட்சி பதவி தருவது என்றால் ஓகே அதுவும் துணை செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தான் வழங்க முடியும். சேர்ந்த உடனே ராஜ்யசபா சீட்டு கொடுத்தால் மற்ற சீனியர்கள் கோபித்துக் கொள்வார்கள். ஏற்கனவே 2021 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பலர் ராஜ்யசபா சீட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ராஜ்யசபா சீட்
அவர்களுக்கு தராமல் உங்களுக்கு தந்தால் பிரச்சனை வரும் வேண்டுமென்றால் லோக்சபா சீட் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் லோக்சபா தேர்தலின் போது செலவுகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க முடியாது. ராஜ்ய சபா சீட்டு தான் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதவ் அர்ஜுனா கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராஜ்யசபா சீட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறிய நிலையில் அதிருப்தி அடைந்த ஆதவ் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்து விட்டார்"என்றனர்.

copied from social media

செங்கோட்டையனின் கேம் பிளான்

 செங்கோட்டையனின் கேம் பிளான்.. அதிமுகவில் அடுத்த விக்கெட்.. விஜய் அடக்கி வாசிக்க இதுதான் காரணமா?

அதிமுகவில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ-வான ஜெயக்குமார் விரைவில் தவெகவுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செங்கோட்டையனின் தீவிர விசுவாசியான ஜெயக்குமாருக்கு இம்முறை சீட் கிடைக்காது என்று சொல்லப்படுவதால், அவரை தேர்தல் நெருங்கும் போது தவெகவில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுகையில், அண்ணன் செங்கோட்டையனை போல் இன்னும் பலரும் தவெகவில் இணைய உள்ளார்கள். அப்படி வருவோருக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று கூறி இருந்தார். விஜய்யின் இந்த பேச்சு கொங்கு மண்டல தலைவர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தலைவரான செங்கோட்டையன் தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் தவெகவில் இணைந்த பின் விஜய் கொடுத்த முக்கிய அசைன்மண்ட், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தவெக பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதற்கான முதல் கட்டமாகவே ஈரோடு பொதுக்கூட்டம் அமைந்துள்ளது.
இதற்கான பணிகளில் செங்கோட்டையனும் தீவிரமாக இருக்கிறார். முதற்கட்டமாக தனக்கு செல்வாக்கு அதிகமுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் செங்கோட்டையன் பேசி வருவது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் தவெக பொதுக்கூட்டம் நடந்த பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் விரைவில் தவெக பக்கம் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
செங்கோட்டையனின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான ஜெயக்குமார், அதிமுக தரப்பில் மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அவரோடு இன்னும் சிலரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதனால் மீண்டும் அதிமுக தரப்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணத்தில் ஜெயக்குமார் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் தேர்தல் நெருங்கும் போது ஜெயக்குமார் தவெகவில் இணைவதற்கான சூழல் கனிந்து வருவதாக தவெகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மற்றொரு அதிமுக நிர்வாகியும் தவெகவில் இணைவது அக்கட்சிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் ஆதிக்கம் முடிவுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
copied from social media

அமைப்பு ரீதியாக வலுவாகும் தவெக

 விஜய் கிட்ட கூட வராத புஸ்ஸி, ஆதவ்! செங்கோட்டையன் வந்தவுடன் நடந்த மாற்றம்! அமைப்பு ரீதியாக வலுவாகும் தவெக

தவெக பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் ஈரோட்டில் நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தமிழ்நாட்டில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் இது அதிக கவனிக்கப்பட்டது. செங்கோட்டையன் வந்த பிறகு நடக்கும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. அதன்படி விஜய்யும் கரூர் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். நேற்றைய தினம் ஈரோட்டில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் நடந்து முடிந்த விஜய்யின் ஈரோடு கூட்டத்தில் பல மாற்றங்களைக் கவனிக்க முடிந்தது. ல்பீக்கர் கம்பத்தின் மீது ஏறிய இளைஞர், விஜய் நேரடியாகக் கண்டித்தார். இதற்கு முன்பு கூட்டங்களில் இதுபோல ஏறுபவர்களைக் கண்டுகொள்ள மாட்டார். ஆனால், நேற்றைய கூட்டத்தில் அந்தத் தொண்டர் இறங்கும் வரை எதுவும் பேசவில்லை. தயவு செய்து இறங்குங்கள் எனக் கண்டித்தார். இறங்கிய பிறகே பறக்கும் முத்தம் கொடுத்த தனது பேச்சைத் தொடர்ந்தார்.
கட்சி ரீதியாகவும் நேற்றைய கூட்டத்தில் இரு முக்கிய மாற்றங்கள் நடந்திருந்தது. பொதுவாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்தினால்.. அந்தப் பகுதியின் மாவட்டச் செயலாளர் அந்தக் கூட்டத்தில் மேடையில் பேசுவார். மாவட்டச் செயலாளருக்கு உள்ளூர் செல்வாக்கு இருக்கும் என்பதால் மாவட்டச் செயலாளர்களின் பேச்சும் கூட்டங்களில் கவனிக்கப்படும்.
ஆனால், விஜய்யின் கடந்த காலக் கூட்டங்களைப் பார்த்தோம் என்றால் பெரிதாக எங்கும் மாவட்டச் செயலாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்காது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசுவார்கள். சில நேரம் அருண்ராஜ் பேசுவார். பிறகு கடைசியாக வந்து விஜய் பேசுவார். அதைத் தாண்டி உள்ளூர் நிர்வாகிகளுக்குப் பேச வாய்ப்பு தரப்படாது. இருப்பினும், நேற்றைய தினம் விஜய் பேசுவதற்கு முன்பு ஈரோடு தவெக மாவட்டச் செயலாளர் பேசியிருந்தார். தவெக கூட்டத்தில் உள்ளூர் மாவட்டச் செயலாளர் பேசுவது இதுவே முதல் முறையாகும். செங்கோட்டையனின் திட்டப்படியே ஈரோடு தவெக மாவட்டச் செயலாளர் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல இந்த முறையை விஜய்யை செங்கோட்டையன் வரவேற்றார். அதன் பிறகு மாவட்டச் செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரது தோளைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் பேசினார். எப்போதும் விஜய் வரும்போதும் கூட புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மட்டுமே வரவேற்பார்கள். ஆனால், இந்த முறை அதுவும் மாறியிருந்தது. விஜய் வந்தபோது ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் அருகில் செல்லவில்லை. செங்கோட்டையன் மற்றும் மாவட்டச் செயலாளர் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு, அங்கிருந்த கேரவனுக்குள் விஜய் சென்றுவிட்டார்.
எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அமைப்பு ரீதியாகக் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அது விஜய் கட்சியில் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே செங்கோட்டையன் தான் என்கிறார்கள். அரசியல் கூட்டங்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதை விஜய் கட்சியினருக்குப் பாடம் எடுப்பது போல இந்தக் கூட்டத்தை செங்கோட்டையன் நடத்தியிருக்கிறார்..
விஜய்க்கு மாநிலம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் கட்சி ரீதியாக அமைப்பு ரீதியாக தவெக பலவீனமாக இருப்பதாகவே சொல்லி வந்தனர். ஆனால், விஜய் கட்சியில் செங்கோட்டையன் வந்த பிறகு மாற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டதையே இது காட்டுகிறது.
copied from social media

புதுச்சேரி

 விஜயை ஏமாற்றிய புதுச்சேரி; பரிசீலிக்கும் ரங்கசாமி?

புதுச்சேரி: விஜயின் புதுச்சேரி பொதுக் கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் யோசனையை பரிசீலனையில் வைத்துவிட்டார் முதல்வர் ரங்கசாமி.
கட்சி தொடங்கி முதல்முறையாக புதுச்சேரியில் உப்பளம் துறைமுகத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார் விஜய்.
இந்த பொதுக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, ஆரோவில்லில் உள்ள மார்க் கபேவில் காபி குடித்தபடியே 'லைவ்' ஆக பார்த்தார் முதல்வர் ரங்கசாமி. கூட்டம் நடந்த பகுதியில் என்.ஆர். காங்கிரஸார் சிலரும் நேரில் சென்று கூட்டத்தை பார்வையிட்டனர். விஜயின் நிகழ்ச்சிக்கு கூடும் கூட்டத்தை பொருத்து, அவருடன் கூட்டணி அமைப்பதாக மனக்கணக்கு போட்டிருந்தார் ரங்கசாமி. ஆனால், அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸார் சிலர் கூறுகையில், முதல்வர் ரங்கசாமி எதிர்பார்த்த அளவுக்கு விஜயின் நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடவில்லை. இதனால் விஜயுடன் கூட்டணி அமைக்கும் யோசனையையே முதல்வர் பரிசீலனையில் வைத்துவிட்டார். தற்போதைய நிலையில், தே.ஜ., கூட்டணியிலேயே அவர் தொடர்வார் என்று, அவர்கள் கூறினர்.
copied from social media

கொங்கு மண்டலம் விஜய் பக்கம்

 கொங்கு மண்டலம் வந்தாச்சு.. அடுத்தது தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள்.. பாமகவின் பிளவு, விசிக மீது தலித் கொண்டிருக்கும் அதிருப்தி விஜய்க்கு பிளஸ்ஸா? எல்லா கட்சி இளைஞர்களின் ஓட்டும் விஜய்க்கு தான்.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்தால் தென்மண்டலம் வசமாகிவிடும்.. வட மாவட்டங்கள் ஏற்கனவே விஜய் பக்கம் வர தொடங்கிவிட்டது.. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நடக்குமா?

தமிழக அரசியலில் கொங்கு மண்டலத்தை தாண்டி, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் மிக வலுவாக இருப்பதை சமீபத்திய கள ஆய்வுகள் மற்றும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு, தென் தமிழகத்தின் அரசியல் சமன்பாடுகளை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்ட அந்த மாநாடு, வெறும் ரசிகர்களின் கூட்டம் மட்டுமல்ல, அது ஒரு அரசியல் சக்தியின் பிரகடனம் என்பதை நிரூபித்துள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை, ஜாதி ரீதியான பிளவுகள் அதிகம் உள்ள சூழலில், விஜய் ஒரு ‘நடுநிலை’ மற்றும் ‘பொதுவான’ முகமாக உருவெடுப்பது, பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
வட மாவட்டங்களில் தவெக-வின் செல்வாக்கு என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு களமாக உள்ளது. குறிப்பாக விக்ரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு பிறகு, விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோரை தனது கொள்கை அடையாளங்களாக விஜய் முன்னிறுத்தியது, வட தமிழகத்தில் வலுவாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக போன்ற கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், “புதிய இரத்தம் பாயட்டும்” என்ற எண்ணம் மேலோங்கி வருவதை உணர முடிகிறது.
தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் விஜய்க்கு இருக்கும் இந்த தீவிர வரவேற்பிற்கு மிக முக்கிய காரணம், அவர் கையிலெடுத்துள்ள வாரிசு அரசியல் எதிர்ப்பு ஆகும். திராவிடக் கட்சிகள் சதா சர்வ காலமும் பாஜக-வை காட்டி அரசியல் செய்யும் நிலையில், விஜய் மக்களின் அன்றாட பிரச்சினைகளான கல்வி சீரழிவு மற்றும் அரசு பள்ளிகள் மூடப்படுவது போன்றவற்றை தொடுவது நடுநிலை வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தெற்கு மண்டலத்தில் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய அரணாக உள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு குழந்தையின் தாய்மாமன் நான் என்று விஜய் மதுரையில் முழங்கியது, குடும்ப தலைவிகளிடையே ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் அதிகார போட்டிக்கு இடையே, தங்களுக்கு பிடித்தமான ஒரு சினிமா நட்சத்திரம் தங்களை சந்திக்க வருவதும், தங்களின் கஷ்டங்களை பேசுவதும் தெற்கு பகுதி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. குறிப்பாக, முக்குலத்தோர் மற்றும் தேவர் சமூகங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், அதிமுகவின் வாக்கு சரிவு விஜய்க்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
வடக்கு மண்டலத்தை பொறுத்தவரை, தவெகவின் வளர்ச்சி என்பது சித்தாந்த ரீதியான ஒரு போராட்டமாக உள்ளது. பெரியாரியம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அதே சமயம் ஆன்மீக விரோதி அல்ல என்ற நிலையை விஜய் எடுத்திருப்பது, மதச்சார்பற்ற வாக்காளர்களை பாதுகாப்பாக உணர வைத்துள்ளது. வேலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், கட்சியின் கீழ்மட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. மற்ற கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்கத் தடுமாறும் நிலையில், விஜய் புதிய வாக்காளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டு வருகிறார்.
இறுதியாக, 2026ல் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்கள் தயாராகி வருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. வெறும் நடிகராக மட்டும் இருந்த விஜய், இப்போது ஒரு “சிஎம்-இன்-வெயிட்டிங்” பிம்பத்தை பெற்றுள்ளார். தேர்தல் வரை இதே வேகத்தை தக்கவைத்து கொண்டால், திமுக மற்றும் அதிமுக-வின் கோட்டைகளாக கருதப்படும் இந்த மாவட்டங்கள், தவெகவின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வரும் போது, விஜய்யின் இந்த புதிய அரசியல் பாய்ச்சல் தமிழகத்தில் ஒரு வரலாற்று சாதனையை எழுதக்கூடும்.
copied from social media

TVK NEWS UPDATES

ALL THE NEWS COLLECTED FROM VARIOUS SOCIAL MEDIAS

தளபதி விஜய், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உட்பட இன்று புதிதாக இணைந்த அனைத்து உறுப்பினர்களையும் முறையாக வரவேற்று டிவிகேவில் இணைத்தார்.

Thalapathy Vijay formally Welcomed and inducted all newly joined members of TVK today, including former minister K.A. Sengottaiyan. 

அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.


மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சத்தியபாமா உள்ளிட்ட தம் ஆதரவாளர்களுடன் இன்று பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

புதுச்சேரி மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சாமிநாதன் மற்றும் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.A.U.அசனா ஆகியோர் இன்று சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.



பாதுகாப்பில்லாத அப்பாவின் ஆட்சி,

அப்பாவிப் பெண்களின் கண்ணீரே சாட்சி !

வேண்டாம் வேண்டாம் வெற்று விளம்பரம் வேண்டாம்,
வேண்டும் வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்!

போராட்டம் இது போராட்டம் இது ஆளும் திமுக அரசுக்கு எதிரான போராட்டம்!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நம் கழகத்தின் சார்பாக போராட்டம் 

__________________________________________________________

COPIED FROM SOCIAL MEDIA

70-80 constituency confirmed for Vijay party.. 2026 election result is hanging assembly.. Vijay will not support ADMK too.. He will not support DMK too.. Re-election in June or July.. Vijay will get special majority then.. Shocking information in the secret survey taken by Delhi..!


70-80 constituency confirmed for Vijay party.. 2026 election result is hanging assembly.. Vijay will not support ADMK too.. He will not support DMK too.. Re-election in June or July.. Vijay will get special majority then.. Shocking information in the secret survey taken by Delhi..!

Actor Vijay's Tamil Nadu Victory Club has landed as a new addition to Tamil Nadu politics, a shocking information about 2026 Assembly election results has been derived from Delhi, a secret...


Actor Vijay's Tamil Nadu Victory Corporation has landed as a new addition to Tamil Nadu politics, a shocking information about the 2026 assembly election results has been released through a secret survey allegedly derived from Delhi. According to the first phase of the survey, the T.V.K. is likely to win in the upcoming elections in about 70 to 80 constituencies.


The most important and sensational information about this survey is that even if the three major contestants DMK, ADMK and TVK get a substantial number of constituencies in the 2026 assembly elections, no party or alliance will get the final majority with 118 places required to rule. As a result, survey results show that an extraordinary situation in the history of Tamil Nadu assembly will be hanged.


When the hanging assembly becomes, the support of the parties remaining to rule is needed. But the information coming out through this secret survey is completely different: "Vijay will not support ADMK too." He will not support DMK too. "Vijay will not take a decision to support any Dravidian alliance, as he sustains his alternative political path." This confirms he will not do 'formality politics'.


With this firm stand of Vijay, there will be a legislation that no party can rule. In this unusual situation, Tamil Nadu will face another election without any stable government in the state. According to this secret survey, it is estimated that re-election will be held in Tamil Nadu in June or July of 2026, after the elections held in April or May.


Delhi survey has released shocking information that this re-election will be a turning point for Vijay and Tamil Nadu Vijay Kazhagam. People who understood the strength of T.V.K through 70-80 constituencies in the first election, will fully support an alternative power with a single goal of a replacement government during re-election, while Dravidian parties need a replacement government.


As a result, the secret survey points out that Vijay-led Tamil Nadu Victory Corporation will win with individual majority and form government in the re-election. Although this is a 'secret survey' information, it is not sure how true this information is as it spreads only on social media. But one thing is true. It is certain that Vijay will not alliance with ADMK or DMK even after the election.

TRANSLATION IN TAMIL

விஜய் கட்சிக்கு 70-80 தொகுதி உறுதி.. 2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. விஜய், அதிமுகவுக்கும் ஆதரவு தரமாட்டார்.. திமுகவுக்கும் ஆதரவு தர மாட்டார்.. மீண்டும் ஜூன் அல்லது ஜூலையில் மறுதேர்தல்.. விஜய் அப்போது தனிப்பெரும்பான்மை பெறுவார்.. டெல்லி எடுத்த ரகசிய சர்வேயில் திடுக்கிடும் தகவல்..!


விஜய் கட்சிக்கு 70-80 தொகுதி உறுதி.. 2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. விஜய், அதிமுகவுக்கும் ஆதரவு தரமாட்டார்.. திமுகவுக்கும் ஆதரவு தர மாட்டார்.. மீண்டும் ஜூன் அல்லது ஜூலையில் மறுதேர்தல்.. விஜய் அப்போது தனிப்பெரும்பான்மை பெறுவார்.. டெல்லி எடுத்த ரகசிய சர்வேயில் திடுக்கிடும் தகவல்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய வரவாக களமிறங்கியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று டெல்லியிலிருந்து பெறப்பட்டதாக கூறப்படும் ஒரு ரகசிய…


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய வரவாக களமிறங்கியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று டெல்லியிலிருந்து பெறப்பட்டதாக கூறப்படும் ஒரு ரகசிய சர்வே மூலம் வெளியாகியுள்ளது. இந்த சர்வேயின் முதல் கட்ட முடிவுகளின்படி, எதிர்வரும் தேர்தலில் த.வெ.க. சுமார் 70 முதல் 80 தொகுதிகளில் உறுதியாக வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகத்தெரிய வந்துள்ளது.


இந்த சர்வேயின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான தகவல் என்னவென்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் த.வெ.க. ஆகிய மூன்று முக்கிய போட்டியாளர்களும் கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றாலும், எந்த ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களுடன் அறுதி பெரும்பான்மையை பெறாது. இதன் விளைவாக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு அசாதாரண சூழல் உருவாகி, தொங்கு சட்டசபையே அமையும் என சர்வே முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன.


தொங்கு சட்டசபை அமையும்போது, ஆட்சியமைக்க எஞ்சியிருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். ஆனால், இந்த ரகசிய சர்வே மூலம் வெளிவரும் தகவல் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது: “விஜய், அதிமுகவுக்கும் ஆதரவு தரமாட்டார். திமுகவுக்கும் ஆதரவு தர மாட்டார்.” தனது மாற்று அரசியல் பாதையை நிலைநிறுத்தும் விதமாக, விஜய் எந்த ஒரு திராவிட கூட்டணிக்கோ ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்க மாட்டார். இதன் மூலம் அவர் ‘ஃபார்மாலிட்டி அரசியல்’ செய்ய மாட்டார் என்ற செய்தி உறுதியாகிறது.


விஜய்யின் இந்த உறுதியான நிலைப்பாட்டால், எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத ஒரு சட்டச்சிக்கல் ஏற்படும். இந்த அசாதாரண சூழலில், மாநிலத்தில் ஸ்திரமான ஆட்சி அமையாத நிலையில், வேறு வழியின்றி தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க நேரிடும். இந்த ரகசிய சர்வேயின்படி, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு, அதே ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தமிழகத்தில் மறுதேர்தல் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த மறுதேர்தல் தான் விஜய்க்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் திருப்புமுனையாக அமையுமென டெல்லி சர்வே திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. முதல் தேர்தலில் கிடைத்த 70-80 தொகுதிகள் மூலம் த.வெ.க.வின் வலிமையை புரிந்து கொண்ட மக்கள், மறுதேர்தலின் போது, ஸ்திரமான ஆட்சி அமைய வேண்டும், அதே சமயம் திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஆட்சி வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஒரு மாற்று சக்திக்கு முழு ஆதரவு அளிப்பார்கள்.


இதன் விளைவாக, மறுதேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என அந்த ரகசிய சர்வே சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. இது ஒரு ‘ரகசிய சர்வே’யின் தகவல் என்றாலும், சமூக வலைத்தளங்களில் மட்டும் இந்த தகவல்கள் பரவி வருவதால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தேர்தலுக்கு பின்னரும் விஜய், அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி.

copied from social media






ஏன்டா வந்தோம்னு இருக்கு

 Thanks to facebook ஏன்டா வந்தோம்னு இருக்கு.. தவெகவுக்குள் வெக்ஸ் ஆன அதிமுக வி.ஐ.பி.க்கள்! புதுப் புயலை வீசிய உளவுத்துறை தவெகவில் சீனியர் - ...